90'ஸில் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி.இவர் கடந்த 2018-ல் மறைந்தார்.இவரது மூத்த மகள் ஜான்வி கபூர், தற்போது ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட ஜான்வி கபூர்,தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

Dhadak படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வருடம் நேரடியாக OTT-யில் வெளியான Gunjan Saxena: The Kargil Girl படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார் ஜான்வி.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பாலிவுட்டின் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார் ஜான்வி கபூர்.இதனை தொடர்ந்து Roohi Afzana,Dostana 2,Good Luck Jerry உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.இதில் Good Luck Jerry படம் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் பீச்சில் பிகினியுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.