ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹேக்டே இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்து அசத்தியிருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.

90'ஸ் கிட்ஸின் பல நினைவுகளை இந்த படத்தின் மூலம் கொண்டுவந்திருப்பார் படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.அதோடு டெக்னாலஜியால் மனிதர்களுக்கு இடையே உண்டான இடைவெளி,உருக்கமான கிளைமாக்ஸ் என்று பக்கா காமெடி கலந்த ஒரு கமர்சியல் படத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்திருந்தார் பிரதீப்.அதோடு ஜெயம்ரவியின் நடிப்பும் சேர்ந்து கொள்ள படம் செமஹிட் அடித்தது.

நேற்று இந்த படம் ரிலீசாகி ஒரு வருடம் நிறைவடைந்தது.இதனை ரசிகர்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வந்தனர்.படக்குழுவினர் இந்த ஸ்பெஷல் நாளை முன்னிட்டு ஒரு வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளனர் அதில் படத்தின் மேக்கிங்,தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்,சக்ஸஸ் பார்ட்டி என்று அனைத்தையும் தொகுத்து ரிலீஸ் செய்திருந்தனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்