தியாகராஜன் குமாரராஜாவை புகழ்ந்து பாராட்டிய ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன்.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு.. பின்னணி இதோ..

மாடர்ன் லவ் சென்னை தொடரை பாராட்டிய இயக்குனர் நெல்சன் வைரலாகும் பதிவு இதோ.. Director Nelson about Modern love Chennai | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷாரப், தமன்னா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், கிஷோர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரிக்க அதனுடன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அட்டகாசமான வீடியோவை வெளியிட்டு மேலும் அதகளம் செய்தது ஜெயிலர் படக்குழு. அதன்படி ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்களை பாராட்டி தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“தியாகராஜன் குமாரராஜா அவர்களின் ‘மாடர்ன் லவ் சென்னை’ இணைய தொடரில் அவர் இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ என்ற படத்தை பார்த்தேன்.. ஒரு காதல் கதையை தேர்ந்த கதைகளத்தில் நேர்த்தியாக படமாக்கியுள்ளார். அற்புதமான காட்சியல், சிறந்த தொழில்நுட்பம், நடிகர்களின் கைதேர்ந்த நடிப்பு.. நிச்சயம் தவறவிடாதீர்” என்று புகழ்ந்து பாராட்டி பதிவிட்டுள்ளார்.   இதையடுத்து அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Happened to watch Thiyagarajankumararaja sir’s #Ninaivooruparavai from #ModernLoveChennai, What an abstract and creative way to approach a love story, magical visuals and technical brilliance at its finest form❤️❤️and added with excellent performances from the cast.Don’t miss it

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) May 17, 2023

உலகளவில் பிரபலமடைந்த மாடர்ன் லவ் தொடரின் தமிழ் வெர்ஷன் ‘மாடர்ன் லவ் சென்னை’ வரும் மே 18 அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில் தியாகராஜன் குமாரராஜா உட்பட பாரதி ராஜா, பாலாஜி சக்தி வேல், ராஜூ முருகன், அக்ஷய் சுந்தர், கிருஷ்ண குமார் ராம் குமார் ஆகிய இயக்குனர்கள் இயக்கத்தில் உருவான படங்களின் தொகுப்பாக அமைந்தது மாடர்ன் லவ் சென்னை. இந்த தொடர் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அவர்களின் பதிவு மேலும் படம் குறித்த எதிர்பார்பை உயர்த்தி உள்ளது. நெல்சன் அவரது பதிவில் ரசிகர்கள் ஜெயிலர் திரைப் படம் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.

ஆரண்ய காண்டம்.. சூப்பர் டீலக்ஸ்..  மூன்றாவது படம் எப்போது? அப்டேட் கொடுத்த தியாகராஜன் குமாரராஜா.. - Exclusive Interview இதோ..
சினிமா

ஆரண்ய காண்டம்.. சூப்பர் டீலக்ஸ்.. மூன்றாவது படம் எப்போது? அப்டேட் கொடுத்த தியாகராஜன் குமாரராஜா.. - Exclusive Interview இதோ..

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இராவண கோட்டம் படத்தின்  'தலை சாஞ்சிருச்சே..' பாடலின் வீடியோ வெளியானது – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இராவண கோட்டம் படத்தின் 'தலை சாஞ்சிருச்சே..' பாடலின் வீடியோ வெளியானது – வைரலாகும் Glimpse இதோ..

QR Code மூலம் பிச்சை எடுக்கும் யோகிபாபு.. கலகலப்பான காட்சியை வெளியிட்ட 'பிச்சைக்காரன் 2' படக்குழு – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

QR Code மூலம் பிச்சை எடுக்கும் யோகிபாபு.. கலகலப்பான காட்சியை வெளியிட்ட 'பிச்சைக்காரன் 2' படக்குழு – வைரலாகும் Glimpse இதோ..