ஜெய் - அருண் ராஜா காமராஜ் கூட்டணியில் அதிரடி வெப்சீரிஸாக வரும் லேபிள்... ரசிகர்களின் கவனம் ஈர்த்த விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

ஜெய் - அருண் ராஜா காமராஜ் கூட்டணியின் லேபிள் வெப் சீரிஸ் ட்ரெய்லர்,jai arunraja kamaraj in label web series trailer out now | Galatta

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் முதல் முறை நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அதிரடியான லேபிள் வெப் சீரிஸின் விறுவிறுப்பான டீசர் வெளியானது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த தீராக் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஜெய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அந்த வகையில் ஜெய் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் பிரேக்கிங் நியூஸ் என்னும் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. முன்னதாக தனது 32 வது திரைப்படமாக உருவாகும் 1 KM என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் ஜெய் தொடர்ந்து அறம் படத்தின் இயக்குனர் கோபி நயனார் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்திலும் இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்கிறார் இது தவிர நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமாக உருவாக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திலும் நடிகர் ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் ஜெய் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரில்லர் வெப் சீரிஸாக வெளிவர தயாராகி இருக்கிறது லேபிள் வெப் சீரிஸ். ஏற்கனவே நடிகர் ஜெய் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் நல்ல ரொமான்டிக் காமெடி வெப் சீரிஸாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்ததை தொடர்ந்து இந்த லேபிள் வெப் சீரிஸும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவர இருக்கிறது. கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கிய பிரபல இயக்குனராகவும், பாடகர் நடிகர் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திகழும் அருண் ராஜா காமராஜ் இந்த லேபிள் வெப் சீரிஸை எழுதி இயக்கியிருக்கிறார். 

நடிகர் ஜெய் உடன் இணைந்து மாஸ்டர் மகேந்திரன் மற்றும் தன்யா ஹோப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த லேபிள் வெப் சீரிஸில் ஹரிசங்கர் நாராயணன், இளவரசு, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீமண், சரண்ராஜ், DRK.கிரண், ரமேஷ் திலக் மற்றும் ஜஸ்பர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த லேபிள் வெப் சீரிஸ்க்கு சாம்.CS இசையமைத்திருக்கிறார். விரைவில் இந்த லேபிள் வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாக இருக்கும் நிலையில் தற்போது இந்த லேபிள் வெப்சீரிஸின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லேபிள் வெப் சீரிஸ் ட்ரெய்லர் இதோ...