சந்தானத்தின் அடுத்த அசத்தலான காமெடி RIDE... ரெட்ரோ ஸ்டைலில் வந்த புதிய படத்தின் கலக்கலான டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் இதோ!

சந்தானத்தின் 80s பில்டப் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,Santhanam in 80s buildup movie first look poster out now | Galatta

அடுத்தடுத்து கலக்கல் காமெடி படங்களை கொடுத்து வரும் நடிகர் சந்தானத்தின் அடுத்த காமெடி ரைடாக வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து காமெடியனாக கலக்கி முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் தனக்கென தனி ஸ்டைலில் அட்டகாசமான கவுண்ட்டர் காமெடிகள் மூலம் மக்கள் மனதை வென்றவர். கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சந்தானம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக தனது புதிய பாதையை தொடங்கினார். தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் என வரிசையாக கலக்கலான படங்களை கொடுத்து வருகிறார். 

இந்த வரிசையில் இந்த 2023 ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த கிக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு தயாராகி வரும் மற்றொரு நகைச்சுவை படமான இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் N.ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்திலும் சந்தானம் நடிக்க இருப்பதாக தெரிகிறது இதுவரை அது குறித்த எந்த அறிவிப்புகளும் வராத நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இதனிடையே சந்தானம் நடிப்பில் அடுத்த காமெடி ரைடாக ரெட்ரோ ஸ்டைலில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. பிரபுதேவாவின் குலேபகாவலி, ஜோதிகாவின் ஜாக்பாட் மற்றும் காஜல் அகர்வாலின் கோஸ்டி உள்ளிட்ட என்டர்டெய்னிங் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் S.கல்யாண் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்திற்கு பில்டப் என பெயரிடப்பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சந்தானம் உடன் இணைந்து ராதிகா ப்ரீத்தி கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த பில்டப் திரைப்படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் முனீஸ் காந்த் ரெடி மன்சூர் அலிகான் டைகர் தங்கதுரை மொட்டை ராஜேந்திரன் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் MS.பாரதி படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த பில்டப் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இன்று அக்டோபர் 18ஆம் தேதி சந்தானத்தின் பில்டப் திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கலக்கலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

A rib-tickling rollercoaster ride of fun and laughter is all set to begin!@iamsanthanam's #80sBuildup first look is here 😃#80sBuildupFirstLook@DirKalyan @preethi_radhika @ksravikumardir @MunishkanthR @KingsleyReddin @thangadurai123 @GhibranVaibodha @kegvraja @NehaGnanavelpic.twitter.com/mFOeth9Err

— Studio Green (@StudioGreen2) October 18, 2023