தளபதி 68 டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..

தளபதி 68 பட அப்டேட் குறித்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு வைரல் வீடியோ உள்ளே - Venkat prabhu about thalapathy 68 movie update | Galatta

ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எதிர்பார்த்து நிற்கும் திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ தளபதி விஜய் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அறிவிப்பிலிருந்தே தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள லியோ திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தையொட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் 68 வது திரைப்படமாக உருவாகவிருக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தின் அப்டேட்டும் வெளியாகி வைரலானது. அதன்படி ஏஜிஎஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக வெளியான அப்டேட் வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி இனையத்தில் வைரலானது. அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வருவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்திலே பொங்கல் வெளியீட்டாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் சுனைனா நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வெளிவரவிருக்கும் ‘ரெஜினா’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தளபதி 68 பட  இயக்குனர் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  விழாவில் ரெஜினா படக்குழுவினர் குறித்து பேசுகையில்,

"சதீஷ் எனக்கு கல்லூரி காலத்திலிருந்தே பழக்கம்.  அவருடைய இசை ஞானம் எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. கோவிட் நேரத்தில் எனக்கு 2,3 பாடல் அனுப்பினார். ரொம்ப பிடிச்சது.‌ மிரண்டுட்டேன்.  அப்பாக்கு பிடித்த நபரும் அவர்தான். அவர் படம்  பண்ணுவார் னு நான் எதிர்பார்க்கவில்லை.  சுனைனா இப்படி ஒரு கதையில் பார்த்ததில்லை. முதல் பார்வை பார்க்கும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது.   படம் குறித்து நிறைய சதீஷ் என்னிடம் பகிர்ந்துள்ளார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..“ என்றார் இயக்குனர் வெங்கட் பிரபு. பின்னர் ரசிகர்கள் தளபதி 68 படம் குறித்த அப்டேட் கேட்கையில் இயக்குனர் வெங்கட் பிரபு, “தளபதி 68 அப்டேட் கொடுக்குற நேரம் இல்லை. லியோ படம் திரையில் வந்தபின் அப்டேட் வரும். நான் அப்டேட் எதனா கொடுத்த லியோ சாரே திட்டுவார். எல்லா இடத்துக்கும் போய் அப்டேட் கொடுக்குறேன்னு.. அதனால் லியோ வந்தபின் தளபதி 68 அப்டேட் வரும்” என்றார் வெங்கட் பிரபு.இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு பேசிய வீடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

 

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘குக்கு வித் கோமாளி’ புகழ்.. லைக்குகளை குவிக்கும் பதிவு – விவரம் உள்ளே..
சினிமா

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘குக்கு வித் கோமாளி’ புகழ்.. லைக்குகளை குவிக்கும் பதிவு – விவரம் உள்ளே..

“என் அம்மா..‌என் உணர்வு..‌ என் வாழ்க்கை..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ..
சினிமா

“என் அம்மா..‌என் உணர்வு..‌ என் வாழ்க்கை..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ..

‘வீரன்’ கெட்டப்பில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி.. அரங்கம் அதிர ஆர்பரித்த குழந்தைகள்  – விவரம் உள்ளே..
சினிமா

‘வீரன்’ கெட்டப்பில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி.. அரங்கம் அதிர ஆர்பரித்த குழந்தைகள் – விவரம் உள்ளே..