இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா மோத்வானியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் 105 சமீபத்தில் வெளியான 105 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 105 படத்தின் ருசிகர தகவல் வெளியாகி உள்ளது.

உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் One not Five Minutes படத்தினை இயக்குனர் ராஜு டுஸ்ஸா எழுதி இயக்கும் 105 மினிட்ஸ் திரைப்படத்தை தயாரிப்பாளர் பொம்மக் சிவா தனது ருத்ரன்ஷ் செலுலாய்ட் சார்பில் தயாரிக்கிறார். விக்ரம் வேதா கைதி படங்களின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க  கிஷோர் பொயிடபு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

One not Five Minutes படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு,  வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் மொத்தமாக 5 லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில்  20 நிமிடங்கள் வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்திய திரையின் மொத்த வரலாற்றில், மூன்றாவது முறையாக,  ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது இது போல் பல்வேறு சிறப்பு தன்மைகளை பெற்ற ஒரு புதுவித அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

One not Five Minutes திரைப்படம்  திரை நேரத்தில்,  மிகச்சரியாக 105 நிமிடங்களில் கதையின் சம்பவங்கள் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படத்தினை வெளியிடவுள்ளனர். மேலும் இப்படத்தில் குறிப்பிடதக்க மற்றொரு அம்சம் என்னவெனில், ஒரு கதாப்பாத்திரத்தினை கொண்டு, முழுப்படமும் ஒரே ஷாட்டில் வரும்படியான முதல்படமாக இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது. 

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் One not Five Minutes திரைப்படம் அறிவிப்பு வெளியான கணத்திலிருந்தே,  ரசிகரிளிடம் எதிர்பார்ப்பு மிக்க ஒரு படமாக இருந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள், உலகளவில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு,  இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். One not Five Minutes படத்தினை தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய பிராந்திய மொழிகளல்லாமல் சைனீஸ், கொரியன் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.