கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் D43. ஜிவிபிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர்.

GV Prakash Says D43 Music Album Will Be Amazing

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த ஆடியோ அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் பதிவு செய்துள்ளார். இன்று ஜிவி பிரகாஷின் பிறந்தநாள் என்பதால் இயக்குனர் கார்த்திக் நரேன் வாழ்த்தினார். அதற்கு நன்றி தெரிவித்த ஜிவி, D43 படத்தின் ஆடியோ அற்புதமாக வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் வரிகள் எழுதியுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் சிக்கியது.  

GV Prakash Says D43 Music Album Will Be Amazing

அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களுக்கு பிறகு இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் லாக்டவுன் முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.