கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அரசு சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளித்தாலும், திரையரங்குகள், வணிக வளாககங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. இப்படியிருக்க, இந்த வருடம் வெளியாகவிருந்த படங்களின் ரீலிஸ் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில படங்கள் நேரடியாக ஓடிடி எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. 

Arun Vijay Vaa Deal To Directly Release on OTT Arun Vijay Vaa Deal To Directly Release on OTT

கடந்த மே 29-ம் தேதி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுது. அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் திரைப்படமும் வருகிற ஜூன் 19-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து அருண் விஜய் நடித்த வா டீல் படம் வெளியாகவுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த்திகா நடித்த இந்த படத்தை ரத்ன சிவா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். 

Arun Vijay Vaa Deal To Directly Release on OTT

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் JSK சதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், எங்கள் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேசன் தயாரித்துள்ள படங்களான அண்டாவக் காணோம், வா டீல், மம்மி சேவ் மீ' ஆகிய படங்களை நேரடியாக ஓடிடி-ல் வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் 3 பெரிய படங்களின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றிய அறிவிப்பையும் விரைவில் வெளியிடவிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.