தமிழ் திரையுலகில் அனுபவம் நிறைந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் கண்ணன். பழம்பெரும் இயக்குனர் பீம் சிங்கின் மகனான இவர் பல வெற்றி திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். புகழ் பெற்ற எடிட்டர் லெனினின் மூத்த சகோதரரும் கூட. நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, மண்வாசனை, பசும்பொன் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததால் இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தார். 

Ace cinematographer B Kannan Passed Away

தமிழ் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. 

Ace cinematographer B Kannan Passed Away Ace cinematographer B Kannan Passed Away

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தியை அறிந்த தமிழ் திரையுலகினர் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சில நாட்களில் பல திரைப்பிரபலங்களின் மறைவு நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.