லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஹிந்தி ரீமேக்... முனிஷ்காந்த் கேரக்டரில் கலக்கும் விஜய் சேதுபதி! விறுவிறுப்பான டீசர் இதோ

லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஹிந்தி ரீமேக் பட டீசர் வெளியீடு,Lokesh kanagaraj managaram hindi remake mumbaikar movie teaser | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு நீண்ட காலமாக காத்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் மாஸான டீசர் வெளியானது. இந்திய சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டெட் இயக்குனராக திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது முதல் படமாக வெளிவந்த திரைப்படம் தான் மாநகரம். அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் இந்திய சினிமாவை இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பக்கம் திருப்பியது. இதனை அடுத்து தளபதி விஜய் உடன் மாஸ்டர், உலகநாயகன் கமல்ஹாசன் உடன் விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். தளபதி விஜயின் 68வது படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நீண்ட காலமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாரான மும்பைக்கர் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், வருகிற ஜூன் இரண்டாம் தேதி ஜியோ சினிமா தளத்தில் மும்பைக்கர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்திய சினிமாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும் முன்னணி இயக்குனருமான சந்தோஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் மும்பைக்கர் திரைப்படம் தயாராகி இருப்பது குறிப்பிடத்தக்கது. விக்ராந்த் மாசே, ராகவ் பினானி, தான்யா மணிக்ட்லா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேட்கர், சஞ்சய் மிஸ்ரா, ஹிரித்து ஹருண், உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மும்பைக்கர் திரைப்படத்தை ஜோதி தினேஷ் பாண்டே, ரியா ஷிபு இணைந்து தயாரித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, திலீப் தாமோதர் படத்தொகுப்பு செய்திருக்கும், மும்பைக்கர் திரைப்படத்திற்கு சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் என்பதை தாண்டி மும்பைக்கர் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகரிக்க காரணம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் கேரக்டர் தான். மாநகரம் திரைப்படத்தில் நடிகர் முனிஷ்காந்த் நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹிந்தியில் மும்பைக்கர் படத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக பாலிவுட்டில் கத்ரீனா கைஃப்புடன் இணைந்து நடித்திருக்கும் மேரி கிறிஸ்மஸ் ஹிந்தி படமும் காந்தி டாக்ஸ் எனும் மௌன படமும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் கதாநாயகன் - வில்லன் என்ற கதாபாத்திரங்களை எல்லாம் தாண்டி முனீஸ்காந்த் நடித்த மிக முக்கிய வேடத்தில் மும்பைக்கர் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள் வரும் ஜூன் இரண்டாம் தேதி ஜியோ சினிமா தளத்தில் கண்டு ரசிக்கலாம். சற்று முன் வெளிவந்த மும்பைக்கர் படத்தின் விறுவிறுப்பான டீசர் இதோ…
 

'அது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கவில்லை!'- சீயான் விக்ரம் காயமடைந்தது & தங்கலான் படப்பிடிப்பு குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்! வீடியோ உள்ளே
சினிமா

'அது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கவில்லை!'- சீயான் விக்ரம் காயமடைந்தது & தங்கலான் படப்பிடிப்பு குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்! வீடியோ உள்ளே

வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலிSதாணு உடன் கைகோர்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்... புதிய பிரம்மாண்ட பட மாஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலிSதாணு உடன் கைகோர்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்... புதிய பிரம்மாண்ட பட மாஸ் அறிவிப்பு இதோ!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - அருள்நிதி - டாடா தயாரிப்பாளரின் அதிரடியான கழுவேத்தி மூர்க்கன்… கவனத்தை ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ இதோ
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - அருள்நிதி - டாடா தயாரிப்பாளரின் அதிரடியான கழுவேத்தி மூர்க்கன்… கவனத்தை ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ இதோ