தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும் ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் தற்போது நடித்துவரும் மாஸ்டர் படத்தின் அப்டேட் எதாவது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியிடுங்கள் என கேட்டு #MasterTrailer என்ற ஹாஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

Film Stars Wish Vijay On His 46th Birthday

இந்நிலையில் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் போஸ்டர் ஒன்றை மட்டுமே வெளியிட்டுள்ளார். எதிர்க்க எதிர்க்க எழுவேன் என் ரசிகர்களுடன் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவரை தாங்கி நிற்கும் அவரது ரசிகர்களுக்காக தான் இதை குறிப்பிட்டுள்ளனர். விஜய்க்காக என் அன்பை காட்ட நான் இந்த போஸ்ட்டரை வெளியிடுகிறேன் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மகேந்திரன் மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். நீங்கள் எனக்கும் மற்ற இளைஞர்களுக்கும் inspiration ஆக இருக்கிறீர்கள். நான் உங்களுடன் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ள ட்விட்டில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. அடுத்த வருடம் சிறப்பானதாக, ஆரோக்கியமானதாக இருக்கட்டும் என கூறி உள்ளார்.

நம் அன்புக்குரிய விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்களுடன் எப்போதும் ஆதரவாக இருந்தததற்கு நன்றி நா.. நீங்கள் எங்கள் மீது காட்டிய அன்பு மற்றும் அக்கறை மிகப்பெரியது. உங்கள் மீது எப்போதும் எங்கள் அன்பு இருக்கும் என அட்லீயின் மனைவி ப்ரியா ட்விட்டரில் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தான் மாஸ்டர் படத்திற்காக வெறித்தனமாக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகரான ஷாந்தனு பதிவிட்டுள்ள ட்விட்டில் கொளுத்துங்கடா.. எனக்கு மிகவும் நெருக்கமான விஜய் அண்ணா, நம்ம சகோதரர் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ள வாழ்த்து ட்விட்டில் Happy birthday விஜய் சார். கடவுள் உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுக்கட்டும். மாஸ்டர் படத்திற்காக காத்திருக்கிறேன் என அவர் கூறி உள்ளார்.

நடிகர் நட்டி நட்ராஜ், இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் தளபதி விஜய்  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

எங்களுடைய ஃபேவரைட் தளபதி விஜய் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வெங்கட் பிரபு வாழ்த்தியுள்ளார்.