பிரபல தென்னிந்திய நடிகரான ஜெயராம் மற்றும் நடிகை குஷ்பூ இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான “முறை மாமன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர்.C. தொடர்ந்து “உள்ளத்தை அள்ளித்தா” “மேட்டுக்குடி” என கலகலப்பான திரைப்படங்களை இயக்கி வந்த சுந்தர்.C, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம் உலகநாயகன் கமல்ஹாசனின் அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரது இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அரண்மனை திரைப்படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை குஷ்புவை இயக்குனர் சுந்தர்.C திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் அவந்திகா & அனந்திதா என்று 2 மகள்கள் உள்ளனர். 

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். திரையுலகில் கதாநாயகியாக திகழ்ந்த நடிகை குஷ்பூ சின்னத் திரை மெகா தொடர்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள அண்ணாத்த படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.C & நடிகை குஷ்பூ தம்பதியினரின் வெளிவராத பழைய பொக்கிஷமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. பிரசவத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை குஷ்பூ ,”1995இல் காதலில் விழுந்தோம். 2000ல் திருமணம் செய்து கொண்டோம். 2020  இதில் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறோம் காலம் மாறினாலும் நாங்கள் அப்படியே தான் இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். நடிகை குஷ்பூ & இயக்குனர் சுந்தர்.C தம்பதியினரின் இந்த பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.