“லியோ படத்தில் பாடல் எழுதுவீங்களா?” ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

லியோ படத்திற்கு பாடல் எழுவது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - Vignesh shivan about lokesh kanagaraj  Leo movie | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்து அதே நேரத்தில் பாடலாசிரியாராகவும் தயாரிப்பாளராகவும் பல பன்முக திறமையில் அசத்தி வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனராக கவனம் பெற்றது தாண்டி பாடலாசிரியாராக ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டார். அதன்படி அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் பாடல்கள் எழுதி அதிகம் கவனம் பெற்றார். இன்று வரை அவர் எழுதிய பாடல்கள் ரசிகர்கள் முணுமுணுத்து கொண்டே இருக்கின்றனர். அதன்படி விக்னேஷ் சிவன் தளபதி விஜய் அவருக்கு மாஸ்டர்  படத்தில் ‘அந்த கண்ண’, ‘குட் பண்ணுடா’ பாடலை எழுதியிருந்தார். அனிரூத் இசையில் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் ரசிகர் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் லியோ திரைப்படத்தில் பாடல்கள் எழுதிவீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன்,  "அது அவங்கதான் சொல்லனும். விக்ரம் படத்தில் எனக்கு வாய்ப்பு வரல.. அது போல அந்த இயக்குனரோட முடிவதான். அவங்க கொடுத்த எழுதலாம்." என்றார். மேலும் சிலம்பரசனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு "அவருக்கு ஏற்ற சரியான கதை இருந்தால் கண்டிப்பாக பண்ணலாம்." என்றார்.

தளபதி விஜய் வைத்து திரைப்படம் இயக்கினால் அது உங்கள் பாணியில் ஜாலியான படமாக இருக்கும்? என்ற கேள்விக்கு,"ஒரு கமர்ஷியலா ஒரு படம் பண்ணனும் தான் நினைப்பேன். கண்டிப்பா ஜாலிய விஷயங்கள் படத்தில் இருக்கும்.‌ விஜய் சார் ஒரு ஜாலியான ஹீரோ.. அவர் காமெடிய ரொம்ப சூப்பரா கையாளக்கூடிய ஸ்டார்.‌ அப்படி இருக்க அவங்களோட ஸ்டைலையும் சேர்த்து வழக்கமான படமாக இல்லாமல் எதாச்சும் புதுசா படம் பண்ணனும் தான் முயற்சி செய்வேன்". என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பல தகவல்கள் கொண்ட முழு நேர்காணல் இதோ..

 

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ரிலீஸ் தேதியை Super Cool போஸ்டருடன் அறிவித்த படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ரிலீஸ் தேதியை Super Cool போஸ்டருடன் அறிவித்த படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அப்டேட் இதோ..

வெற்றிநடைபோடும் ‘விடுதலை’.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ இதோ.
சினிமா

வெற்றிநடைபோடும் ‘விடுதலை’.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ இதோ.

சினிமா

"ஏன் பாண்டியர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுகிறீர்கள்?" ரசிகரின் கேள்விக்கு இயக்குனரின் பதில்.. - முழு நேர்காணல் இதோ..