நறுமுகையே முதல் தேவராளன் ஆட்டம் வரை.. Period படங்களில் இசையின் முக்கியத்துவம் குறித்து ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த தகவல் – சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..

பீரியட் படங்களில் இசையின் முக்கியத்துவம் குறித்து ஏ ஆர் ரகுமான் பகிந்த தகவல்  இதோ - Ar Rahman about importance of music in films | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனர் இசையமைப்பாளர் கூட்டணியில் படத்திற்கு படம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி கடந்த 31 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்களை ஒரு சேர கட்டி ஆண்டு வாழும் கூட்டணி இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். ரோஜா படம் தொடங்கி இன்றைய பொன்னியின் செல்வன் 2 வரை பல டிரெண்ட்டிங் பாடல்களை கொடுத்து மக்களின் மனதை பல தசாப்தங்களாக கவர்ந்து வரும் இந்த கூட்டணி நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தங்கள் கூட்டணியில் உருவாகிய படங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் காலம் கடந்து எடுக்கப்படும் Period படங்களில் இசையின் முக்கியத்துவம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.  அதில் மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் பீரியட் படமாக உருவான இருவர் மற்றும் பொன்னியின் செல்வன் குறித்து பேசியவர்கள்,  

"இருவர் படத்தில் கடந்த காலத்தை அப்படியே நகலெடுக்காமல் அந்த காலத்தின் அனுபவத்தை மக்களுக்கு தூண்ட வேண்டும்‌ என்று நாங்கள் ஆசை பட்டோம். எனக்கு தெரியவில்லை நாங்கள் அதை செய்தோமா என்று.. நாங்கள் படத்தின் மூலம் ஒழுங்குபடுத்தினோம். அது அந்த காலத்தை கொண்டு வந்தது. இருந்தாலும் சில  விஷயங்கள் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தோம்." என்றார் இயக்குனர் மணிரத்னம் .

மேலும் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்  “என்னை பொறுத்தவரை காலம் சார்ந்த படைப்பு என்பது புனிதமானது‌.  கண்ணதாசன், எம்எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கே மகாதேவன். இவர்கள் செய்ததில் ஒரு சிறிய பங்கு நான் செய்தேன் என்றால் அது என் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். நான் அந்த பாடல் வரிகளையும், இசையையும், பி சுசீலா அவர்களின் குரல் எல்லைவற்றையும் மதிக்கின்றேன்.” என்றார் ஏ ஆர் ரகுமான்.

மேலும் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள், “பொன்னியின் செல்வன் படத்தில் நம்மால் 10 வது நூற்றாண்டை உருவாக்க முடியாது..யாருக்கும் தெரியாது அது எப்படி இருந்தது என்று நம்மிடம் அதற்கான சான்று மட்டுமே இருந்தது. ஆனால் அவர்களின் இசை என்னவென்பது நமக்கு தெரியாது. 10 நூற்றாண்டில் என்ன இசை இருந்திருக்கும் என்பதை நவீன நூற்றாண்டில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். அது உண்மையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அந்த காலத்தை அதை மீட்டுருவாக்கம் செய்ததா என்று மட்டுமே பார்த்தோம்.  அதனால் நாங்கள் இருப்பதிலே சுற்றாமல் அங்கிருந்து வேறு தளத்திற்கு சென்று ஒரு உலகத்தையே உருவாக்கினோம்.  அது பார்வையாளர்களை 10 நூற்றாண்டிற்கு கொண்டு செல்ல இசை ஒரு பாலமாக அமைந்தது.  இன்றைய இளைஞர்கள் இசையை காலத்திற்கு இடைப்பட்ட பாலமாக பார்க்கிறார்கள்  அதனாலே அதை நேர்த்தியாக பயன்படுத்தினோம். இருவர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நறுமுகையே’ பாடல் கிட்டத்தட்ட தசாப்தங்களை கடந்து விட்டது. இன்னும் நீங்கள் நறுமுகையே பாடலை கேட்டால் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நுணுக்கமான இசையை தாண்டி அந்த மெலடி அப்படியே இருந்து கொண்டுதான் இருக்கும்." என்றார் மணிரத்னம்.

ஏஆர் ரகுமான், "அந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாடல் வரிகள்.. வைரமுத்து சார் அப்போது சொன்னார். ‘இந்த பாடலின் வரிகளை இன்னும் பழமையானதாகவும் சங்க கால வரிகளில் மாற்றலாமா?’ என்று.. ‘நான் யாருக்கும் அது புரியாது என்றேன்’. அதற்கு அவர், ‘அதைபற்றி கவலைபடாதீர்கள், நமக்கு புரிந்தால் அது எல்லோருக்கும் புரியும்’ என்றார்.  தமிழ் படங்களில் பழைய படங்களை எடுத்து கொண்டாலும் அதில் அந்த பாடலை போன்று சங்க கால வரிகளை பயன்படுத்திருக்கமாட்டார்கள். மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு கவலையில்லை. அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் அறிவோம். சில நேரங்களில் அவர்கள் விரும்புவதை நாம் கொடுக்க வேண்டும். அருணகிரிநாதர் பயன்படுத்திய சந்தம், அதை நாம் கொண்டு வர வேண்டும். அது பழைய மனிதர்களுக்கானது மட்டும் அல்ல அது எல்லோருக்குமானது. தேவராளான் ஆட்டம் பாடலில் அதை பயன்படுத்தினேன். இளங்கோ கிருஷ்ணன் அவரிடம் இதுகுறித்து சொல்லி அதைபோல் வரிகள் கேட்டேன். அவர் 45 நிமிடத்திலே 3 பக்கத்தை முடித்துவிட்டார்.  மூன்று மைக் கொண்டு பாடகர்களை பாட வைத்து பாட வைத்தோம். அது அருமையான அனுபவத்தை கொடுத்தது” என்றார் ஏ ஆர் ரகுமான்

மேலும் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இருவரும் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

சினிமா

"ஏன் பாண்டியர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுகிறீர்கள்?" ரசிகரின் கேள்விக்கு இயக்குனரின் பதில்.. - முழு நேர்காணல் இதோ..

ட்விட்டருக்கு Bye Bye.. இசையமைப்பாளர் ஜிப்ரானின் அதிரடி முடிவு.. காரணம் இதுதான் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ட்விட்டருக்கு Bye Bye.. இசையமைப்பாளர் ஜிப்ரானின் அதிரடி முடிவு.. காரணம் இதுதான் – வைரலாகும் பதிவு இதோ..

 “Skin Dress லாம் பயன்படுத்தல..” யாத்திசை படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“Skin Dress லாம் பயன்படுத்தல..” யாத்திசை படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..