மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லக்ஷ்மி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

கண்டா வரச் சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி புராணம் ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு பாடல்களுமே கர்ணன் படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், விரைவில் டீஸர் வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார். 

இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தற்போது கர்ணன் படத்தின் டீஸரை பார்த்து விட்டு பாராட்டி ட்வீட் பதிவு போட்டுள்ளது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

அவர் கூறியதாவது தம்பி மாரி கர்ணன் டீஸர் பார்த்தேன். வேற லெவலா இல்ல இதுக்கு பேரு வேற வைக்கனும்ப்பா.. உன் கர்ணன் எல்லோர் மனதையும் உலுகாமல் விடமாட்டான். உன் குழு மொத்தத்திற்கும் மிகப்பெரிய வெற்றிக்கான சத்தத்தின் வாழ்த்துக்கள். இவ்வாறு கர்ணன் பட டீஸரை பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்து பாராட்டி இருந்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவா. 

கடைசியாக தனுஷ் குரலில் வெளியான தட்டான் தட்டான் பாடல் லிரிக் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.