கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் வைத்து அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார். 

Naveen

இதைத்தொடர்ந்து அலாவுதினின் அற்புத கேமரா என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். 

Naveen

இந்நிலையில் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புரட்சியாளர் லெனின் நினைவை போற்றும் வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று. தோழருக்கு செவ்வணக்கங்கள். அவர் நினைவாக என் கடைக்குட்டிக்கு லெனி என்று பெயரிட்டேன். என் லெனி மானுட சமத்துவத்திற்காக வாழும், ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்குணம் கொண்ட பெண்ணாக வளர வேண்டும் என்பது விருப்பம் என பதிவு செய்துள்ளார்.