ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தாராள பிரபு. இதில் தான்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். 

DharalaPrabhu VjAnjana

பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

Anjana

கொரோனா வைரஸ் பாதித்து ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. தற்போது இப்படம் குறித்து பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா பதிவு செய்துள்ளார். ஆன்லைனில் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர் திரை பிரபலங்கள்.