தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக 2019 பொங்கலுக்கு பட்டாஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன்,D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.ஜகமே தந்திரம்,கர்ணன் படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

தனுஷ் Netflix தயாரிப்பில் உருவாகும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் இந்த படத்தினை avengers படத்தினை இயக்கிய Russo Brothers இயக்குகின்றனர்.உலகிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகவுள்ளது.இந்த படத்தில் பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று படத்தின் இயக்குனர் கூட்டணி தெரிவித்துள்ளனர்.படத்தின் முதல் நாள் ஷூட்டிங் புகைப்படம் ஒன்றை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.தனுஷ் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் கலக்க வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.