விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் பிரகதி நடித்து வருகிறார்.பாக்கியராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் படஙக்ளில் ஹீரோயினாக நடித்தார்.தனது திருமணத்துக்கு பிறகு முக்கிய துணை வேடங்களிலும்,சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இவர் நடித்து வந்த அரண்மனை கிளி தொடரில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.இவர் நடித்து வந்த அரண்மனை கிளி சீரியலின் ஷூட்டிங் கொரோனா காரணாமாக தடைபட்டது.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.இவரது நடன வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.தற்போது சேலை காட்டியபடி பைக் ஓட்டுவது போல ஒரு வீடீயோவை பிரகதி பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)