தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டது,இவரது ஜகமே தந்திரம் படம் சில நாட்களுக்கு முன் OTT-யில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

D 43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் இணைந்தார்.

இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,சமுத்திரக்கனி,மஹேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து தனுஷ் ஹைதராபாத்தில் விரைவில் தொடங்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்துள்ளார் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

A post shared by 𝗔𝘀𝘂𝗿𝗮𝗻/Actor (@dhanush.fanlub14)