தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.செல்வராகவன் இயக்கும் இந்த படத்தின் ப்ரோமோ ஷூட் நடத்தப்பட்டு, அறிவிப்பு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தன.

ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் நாளை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.