திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலகமே வியக்கும் கலைஞனாக பணிபுரிந்து வருகிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் லுக் டெஸ்ட் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். D43 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. கடந்த வாரம் பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவுள்ளாராம். 

இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடிக்கவுள்ளார். நடிகர் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கிறார் எனும் அறிவிப்பை வெளியிட்டனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். 

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். பாடல்கள் நன்றாக உருவாகி வருவதாகவும், சாலிட்டான ஆல்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தனுஷ் பாடிய பாடலுடன் படப்பிடிப்பை துவங்கினர் படக்குழுவினர். 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துவிட்டனர். இந்த சுவையூட்டும் செய்தியை டான்ஸ் மாஸ்டர் ஜானி பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த பாடலுக்காக நேற்று நடன ஒத்திகையில் இறங்கினார் தனுஷ். டான்ஸ் மாஸ்டர் ஜானி பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.