விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2வின் வெற்றியாளர் கனி திரு. பிரபல தமிழ் இயக்குனர் திருவின் மனைவியான கனி தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.

சமீபத்தில் தன் ரசிகர்களோடு லைவ்-ஆக கலந்துரையாடல் செய்த கனியிடம் ரசிகர்கள் பலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்தவகையில் ஒரு ரசிகர் பிக்பாஸ் சீசன் 5 பற்றி கேட்ட கேள்விக்கு கனி பதில் அளித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ரசிகர் ஒருவர் “பிக் பாஸ் சீசன் 5-ல் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்களா?” என்று எழுப்பிய கேள்விக்கு ,கனி “கட்டாயமாக இல்லை” என மறுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதன் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் பற்றி பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 கலந்துகொள்வதாக பரவிய வதந்தி அடுத்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தற்போது கனி மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக கனி தன்னுடைய யூடியூப் சேனலில் சமையல் பற்றிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அதுமட்டுமல்லாது பழம்பெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை  ரசிகர்களுக்கு இவர் கதையாக சொல்லி வீடியோவாக வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.