விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிவாங்கி.தனது வித்தியாசமான குரலால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் சிவாங்கி.அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக செல்லப்பிள்ளையாக உருவெடுத்தார் சிவாங்கி.இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து சிவகார்த்திகேயனின் டான்,காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் சிவாங்கி.இவர் பாடிய அஸ்கு மாறோ,அடிபொலி உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது.

இதனை தவிர முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் ஒரு பாடலை பாடி அசத்தியுள்ளார் சிவாங்கி.சூப்பர் சிங்கர் 7 மற்றும் சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்று அசத்தினார்.சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்,சூப்பர் சிங்கர் 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சில நேரங்களில் பகுதிநேர தொகுப்பாளினியாக சிவாங்கி வந்து அசத்தியுள்ளார்.

தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் அறிமுகமான விஜய் டிவியின் அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ஆகியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதுவரை மகாபா மற்றும் பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை இனி சிவாங்கி மகாபா இணைந்து தொகுத்து வழங்குவார்கள்.

நேற்று பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியை மகாபா தொகுத்து வழங்குகிறார் என்ற தகவல் கிடைத்தது,தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் இவர் மாற்றப்பட்டுள்ளது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

cook with comali fame sivaangi to host super singer 8 with makapa anand