சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்று சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.அதில் முதல் படமாக வெளியாகவிருப்பது ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்.இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார்.

பிரபல பாடகரான க்ரிஷ் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

கிராமத்தில் நடக்கும் எதார்த்தமான கதையை பல உணர்வுகளை எடுத்துரைக்கும் படமாக இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 24ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.வித்தியாசமான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்