தமிழகத்தின்  முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித்  கோமாளி நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே எந்த ஒரு நிகழ்ச்சியும் பெறாத மாபெரும் இமாலய வெற்றியை பெற்றது. சமையலை மையப்படுத்திய ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி  நறுமணம் மிக்க சுவையான சமையலோடு நகைச்சுவையும் கலந்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக இடம் பெற்ற புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, பழைய ஜோக் தங்கதுரை, சுனிதா, சக்தி உள்ளிட்ட அனைவருக்கும் அவர்களது சின்னத்திரை பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்நிகழ்ச்சியில் அவர்களின் சிறப்பான பங்களிப்பு இந்நிகழ்ச்சியின் வெற்றியும் அவர்களின் வாழ்க்கை பாதையை மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றது என சொல்லலாம். இந்நிகழ்ச்சியில் குக்-ஆக வந்த பிரபலங்களுக்கும்  இந்நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.

முன்னதாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்து வந்த நடிகை ஷகிலாவை இதுவரை ஆபாசமாக பேசிய  அத்தனை வாய்களும் என்று ஷகிலா அம்மா என்று பேச வைத்த  பெருமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியையே சேரும்.இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில்  குக்-ஆக கலந்துகொண்டு பிரபலமடைந்த தர்ஷா வெளியீட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தர்ஷா குப்தாவின் வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாய் ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. பிறந்து சில தினங்களே ஆன அந்த நாய்க்குட்டியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தர்ஷா பகிர்ந்துள்ளார். அந்த அழகிய நாய்க்குட்டியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரென்டாகி வருகிறது.தற்போது நடிகை தர்ஷா திரௌபதி திரைப்பட இயக்குனர் இயக்கும் அடுத்த திரைப்படமான ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)