அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இதில் ரஜினியை பற்றி இடம் பெற்ற காட்சி ஒன்று பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் போர்க்கொடி தூக்கினர்.இதனை அடுத்து இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கவுவதாக தயாரிப்பாளர் தற்போது தெரிவித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.