விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வர தயாராகவுள்ளது.இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 60 படத்தையும் வினோத் இயக்க,போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

நேர்கொண்ட பார்வை படத்திற்காக பிரத்யேகமாக கலாட்டாவுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வினோத்திடம் இந்த செய்தி குறித்து கேட்டோம்.இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தினார்.நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு பிறகே மற்ற படக்குழுவினரை உறுதிசெய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.தல 60 முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.