"பயங்கர மாஸான படமா இருக்கும்!"- வெற்றிமாறன்-சூர்யாவின் வாடிவாசல் குறித்த அதிரடி அப்டேட் கொடுத்த Rவேல்ராஜ்! வைரல் வீடியோ

வெற்றிமாறன்-சூர்யாவின் வாடிவாசல் குறித்த அப்டேட் கொடுத்த Rவேல்ராஜ்,r velraj about vetrimaaran and suriya in vaadivaasal movie | Galatta

இந்திய சினிமா வியந்து பார்க்கும் அளவிற்கு உலக தரத்திலான ஆகச்சிறந்த படைப்புகளை கொடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அழுத்தமான கதைகளம் கொண்ட படைப்புகளை மக்கள் விரும்பும் விறுவிறுப்பான திரைப்படங்களாக கொடுத்து கிளாஸ் - மாஸ் என விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் தொடர் வெற்றிகளை பெற்று வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் 1. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கி இருக்கும் இந்த விடுதலை திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரு புத்தம் புதிய அனுபவத்திற்குள் கொண்டு சென்று கதை நடைபெறும் தளத்தையும் கதாபாத்திரங்களையும் நிஜத்துக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்று உணர வைத்திருக்கிற விடுதலை பாகம் 1 திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவும் தற்போது மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுவரை நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரி முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிகராக கதையும் நாயகனாக குமரேசன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில், “விடுதலை பாகம் 2 எப்போது வருகிறது? மேலும் வாடிவாசல் மற்றும் வடசென்னை 2 ஆகிய திரைப்படங்கள் எப்போது வருகின்றன?” எனக் கேட்டபோது, “எனக்குத் தெரிந்து இதை அவர் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் சரி சொல்கிறேன்... இன்னும் பத்து நாட்கள் விடுதலை பாகம் 2 படத்திற்கான படப்பிடிப்பு இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் முடிந்து விடும் அதன் பின் அடுத்த நான்கு மாதங்களில் படம் ரிலீஸ் ஆகிவிடும். அதன் பிறகு வாடிவாசல் ஒரு ஆறு மாதம் முதல் எட்டு மாதம் வரை அதற்கான படப்பிடிப்பு போகும். அதன் பிறகு மீண்டும் தனுஷ் சாருடன் வடசென்னை 2.” என பதிலளித்த ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் அவர்களிடம், “வாடிவாசல் முன்னோட்டம் பார்த்தபோது மிகவும் உற்சாகமாக இருந்தது, அது பற்றிய அப்டேட் ஏதாவது கொடுக்க முடியுமா?” என கேட்டபோது, “அதாவது பார்த்தீர்கள் என்றால் இதுவரை ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எவ்வளவோ திரைப்படங்கள் எடுத்து விட்டார்கள்... சரி எடுத்து விட்டார்களே என நினைக்க முடியாது நாம் வெற்றி சாரை பொறுத்தவரையில், அவர் வித்தியாசமான ஒரு ஷார்ட் வைப்பார். எனவே அது இதுவரை யாரும் பண்ணாத ஒரு விஷயத்தை பண்ணுவது அல்லது இதுவரை வராத ஒரு விஷயத்தை செய்வது என்பதுதான் அவருடைய பார்வையாக இருக்கும். எனவே அதைத்தான் செய்வார். கண்டிப்பாக இந்த படம் மாஸாக இருக்கும். பயங்கர மாஸான ஒரு படம் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. கிட்டத்தட்ட கதையை ஓரளவுக்கு என்னிடம் சொல்லிவிட்டார். ஐடியாவாக தெரியும் மீதி எல்லாம் இனிமேல் தான் தெரியும். உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்" என R.வேல்ராஜ் அவர்கள் பதிலளித்துள்ளார். ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் அவர்களின் இந்த சிறப்பு பேட்டி இதோ…


 

“துப்பாக்கி படத்தில் விஜய் கதாபாத்திரம் இப்படித்தான் உருவானது..” ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..
சினிமா

“துப்பாக்கி படத்தில் விஜய் கதாபாத்திரம் இப்படித்தான் உருவானது..” ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..

“நான் பஸ்ல போயிருக்கேன்.. கஷ்டப்பட்டிருக்கேன்.” தனது ஆரம்பகால பயணம் குறித்து மனம் திறந்த நடிகை வாணி போஜன் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“நான் பஸ்ல போயிருக்கேன்.. கஷ்டப்பட்டிருக்கேன்.” தனது ஆரம்பகால பயணம் குறித்து மனம் திறந்த நடிகை வாணி போஜன் – முழு வீடியோ உள்ளே..

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட தனுஷ்.. - – ரசிகர்களால் வைரலாகும் முதல் பார்வை இதோ..
சினிமா

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட தனுஷ்.. - – ரசிகர்களால் வைரலாகும் முதல் பார்வை இதோ..