இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம். கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார். சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் இறங்கியுள்ள கார்த்திக் சுப்பராஜ், லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே படப்பிடிப்பு பணிகளில் இறங்குவார் என தெரிகிறது. 

இந்நிலையில் சியான் விக்ரமின் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு வெள்ளை புகைப்படமான இந்த போட்டோவை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சியான் 60 திரைப்படத்திற்காக லாக்டவுனில் தயாராகிவருகிறார் சியான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இந்த புகைப்படத்தை கூர்ந்து கவனிக்கையில் சியான் 8-பேக்ஸ் வைத்துள்ளதாகவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் சியான் விக்ரம் கலந்துகொள்ளவிருக்கும் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் தற்போது தன் குடும்பத்துடன் வீட்டில் நேரத்தை செலவு செய்து வருகிறார். 

கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் கடைசியாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ்,ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று.

A post shared by Dhruv (@dhruv.vikram) on