இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக தனது நடிப்பின் மூலம்  ரசிகர்களை வியக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பில் பட்டையை கிளப்பி விடுவார் விக்ரம்.கடந்த வருடம் வெளியான கடாரம் கொண்டான் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து கோப்ரா,பொன்னியின் செல்வன்,மஹாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் சியான் விக்ரம்.

கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.லாக்டவுன் நேரத்தில் இந்த படத்தின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

கோப்ரா,மஹாவீர் கர்ணா,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கை கொரோனா பாதிப்பு குறைந்த பின் சியான் விக்ரம் தொடங்குவார் என்று தெரிகிறது.இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து விக்ரம் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமின் வித்தியாச நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் ஐ.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் தெலுங்கு டப் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது.ஐந்து வருடங்கள் கழித்து முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும்,அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது இந்த படம்.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.