சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம் போல் இம்முறையும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்துவும் அடுத்த வாரத்தில் நாடியா சாங்-கும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதனையடுத்து கடைசியாக அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மதுமிதா தேர்வானார். மேலும் கடந்த வாரம் நெருப்பின் வாரமாக அறிவிக்கப்பட்டு இசைவாணி கைப்பற்றிய நெருப்பு நாணயத்தின் பயனாக அவருக்கு பல அதிகாரங்களும் வழங்கப்பட்டது.

கடந்த வாரத்தில் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் பட்டிக்காடா பட்டணமா டாஸ்க் நடைபெற்றது. முன்னதாக இந்தவார எலிமினேஷன்க்கான நாமினேஷனில் இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, வருண், அக்ஷரா, பாவணி, சின்னப்பொண்ணு, சுருதி, அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இவர்களின் இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி நேற்று காப்பாற்றப்பட்டனர். மேலும் மீதமுள்ள போட்டியாளர்களில் பிரியங்கா காப்பாற்றப்படும் புதிய ப்ரோமோ சற்று முன் வெளியானது. இந்நிலையில் பாடகி சின்னப்பொண்ணு இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக நம்பதகுந்த தகவல்கள் வெளியாகின. இன்றைய நிகழ்ச்சியில் சின்னபொண்ணு வெளியேறுவது ஒளிபரப்பாகும்.