இதுவரை வெளிவராத தளபதி விஜயின் துப்பாக்கி பட வசனத்தின் ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரலாகும் வீடியோ இதோ

தளபதி விஜயின் துப்பாக்கி பட வசனத்தின் ரகசியம் பகிர்ந்த ARமுருகதாஸ்,A r murugadoss shared secret of thalapathy vijay thuppaki movie dialog | Galatta

இந்திய சினிமாவில் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதனை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த புதிய திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளிவந்தன. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவின. ஆனால் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. எனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, ரங்கூன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் அடுத்து தயாராகி இருக்கும் திரைப்படம் 16 ஆகஸ்ட் 1947. இயக்குனர் NS.பொன் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ஏ.ஆர்.முருகதாஸ் ப்ரொடக்சன், பர்பிள் புள் என்டர்டைன்மென்ட் மற்றும் காட் பிளஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன. குக் வித் கோமாளி புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் அஸ்தன், ஜேசன் ஷா ஆகியோர் 16 ஆகஸ்ட் 1947 படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

செல்வகுமார். SK ஒளிப்பதிவில், 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்திற்கு சுதர்சன்.R படத்தொகுப்பு செய்துள்ள ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 7-ம் தேதி 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே தற்போது 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், நடிகர் கௌதம் கார்த்திக் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவது குறித்து பாராட்டி பேசியபோது, "சிவகார்த்திகேயன் சார் சொன்னது போல ஒரு ஆக்சன் படம் எடுக்கும்போது ரஜினி சாரை தவிர்க்கவே முடியாது எந்த ஹீரோவை வைத்து செய்தாலும் ஏதாவது ஒரு டயலாக் டெலிவரியில் ரஜினி சார் வந்து விடுவார். அதேபோல கார்த்திக் சார் அவரை நினைக்காமல் எந்த ஒரு ரொமான்ஸ் காட்சியும் யோசிக்க முடியாது. உதாரணத்திற்கு துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு காட்சி வரும் அதில் ஜெயராம் சார் உள்ளே இருப்பார் ஹீரோவும் ஹீரோயினும் தனியாக ஒரு இடத்தில் பேசிக்கொண்டு இருப்பார்கள் அப்போது காஜல் அகர்வால் சொல்வார், "பார் அவன் தேவை இல்லாம என்னையும் டிஸ்டர்ப் பண்ணான் இப்ப உனக்கும் மாமா வேலை பார்க்கிறான்" என்ற உடன்… விஜய் சார் ஒரு வசனம் சொல்வார், "பெரியவங்கள அப்படி எல்லாம் பேசக்கூடாது அவர் வயசுக்கு மரியாதை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கோ" என சொல்வார் இதை வந்து நான் எப்படி சொல்லலாம் என யோசித்த போது, கார்த்திக் சார் தான் ஞாபகத்திற்கு வந்தார்." என சொல்லிவிட்டு அந்த வசனத்தை நடிகர் கார்த்திக் அவர்களின் பாணியில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசி காட்டினார். பின், "இதை நான் இதுவரை விஜய் சாரிடம் சொல்லவில்லை. நீங்கள் படத்தை இப்போது போய் பார்த்தால் அந்த வசனத்தில் தெரியும். இந்த மாதிரியான சமயங்களில் கார்த்திக் சார் வருவார் அதை நாம் தவிர்க்க முடியாது." என தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஏ.ஆர்.முருகதாஸின் அந்த வீடியோ இதோ…

 

ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களின் வாய்ப்புகள் குறைகிறதா?- பொன்னியின் செல்வன் 2-ல் பாடிய முன்னணி பாடகியின் பதில் இதோ!
சினிமா

ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களின் வாய்ப்புகள் குறைகிறதா?- பொன்னியின் செல்வன் 2-ல் பாடிய முன்னணி பாடகியின் பதில் இதோ!

அஜித் குமாரின் வீட்டில் சூர்யா & கார்த்தி... தந்தை மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பு! வைரல் வீடியோ
சினிமா

அஜித் குமாரின் வீட்டில் சூர்யா & கார்த்தி... தந்தை மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பு! வைரல் வீடியோ

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 உடன் கைகோர்க்கும் உலகநாயகன் கமல்ஹாசன்! அட்டகாசமான அறிவிப்பு இதோ
சினிமா

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 உடன் கைகோர்க்கும் உலகநாயகன் கமல்ஹாசன்! அட்டகாசமான அறிவிப்பு இதோ