விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.விஜய் இரட்டை வேடங்களில் வயதான கெட்டப் உடன் இந்த படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.கதிர்,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்து வந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிகளை வசூல் செய்தது.கடந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது பிகில்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் செம ரீச்சை பெற்றிருந்தன.ஆல்பம் வெளியான அனைத்து தளங்களிலும் சூப்பர்ஹிட் முடித்திருந்தது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நடிகை ரெபா மோனிகா ஜான்..இவர் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர் பிகில் படத்தில் நடித்திருந்த அனிதா என்ற கேரக்டருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.இந்த படத்தில் இவரது நடிப்பை பல ரசிகர்களும் பாராட்டி வந்தனர்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்கில் செலவிட்டு வருகின்றனர்.பலரும் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும்,நடன வீடியோக்களை பதிவிட்டும் வந்தனர்.ரெபாவும் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் பேசி , சில போட்டோக்கள் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.தற்போது ரெபா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் நடன வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்