பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று உலகமெங்கும் பிரபலமானவர் தர்ஷன். மாடலிங்கில் பணியாற்றிய தர்ஷன், ஒரு சில விளம்பரப் படங்களில் நடித்தார். பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது. படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தர்ஷனுக்கு வெள்ளித்திரையிலும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Biggboss Tharshans Motivational Instagram Post

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 17-ம் தேதியை தாண்டியும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என அசத்தி வருகின்றனர். 

Biggboss Tharshans Motivational Instagram Post

இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் தோல்வி உங்களை கொன்று விடாது, ஏதோ ஒன்றை சாதிப்பதற்கான ஆசையை அது கொடுக்கும் என பதிவிட்டு, தனது லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தர்ஷனின் இந்த பதிவு அதிக லைக்ஸை குவித்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Failure doesn’t kill you… it increases your desire to make something happen.” —Kevin Costner

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on