தமிழ் திரையுலகில் ஹேட்டர்ஸ் இல்லாத ஹீரோக்களில் ஒருவர் ஷாந்தனு. வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

Shanthnus Konjam Corona Naraiyya Kadhal Teaser

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 17-ம் தேதியை தாண்டியும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என அசத்தி வருகின்றனர். 

Shanthnus Konjam Corona Naraiyya Kadhal Teaser

சமீபத்தில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறார். இந்த லாக்டவுனில் ஒரு குறும்படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது இதன் டீஸர் வெளியாகி அசத்தி வருகிறது. கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் இந்த குறும்படத்திற்கு கணேஷ் இசையமைத்துள்ளார். அப்சர் வெங்கட் டிசைன் செய்துள்ளார். கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். இயக்குனராக கால்பதிக்கும் ஷாந்தானுவை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.