பிக் பாஸ் தமிழ் சீசன் 7: "என்கிட்ட சண்ட போடல ஏன்னா நான் சண்ட போட்டா..!"- மாயாவின் கேம் ப்ளே உண்மையை உடைத்த கானா பாலா! வைரல் வீடியோ

பிக் பாஸ் தமிழ் 7 மாயா கேம் பிளே பற்றி பேசிய கானா பாலா,bigg boss tamil season 7 gana bala about maya game play | Galatta

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 தற்போது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு நேரடியாக ஐந்து புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இன்னும் விறுவிறுப்பை கூட்ட இந்த வாரம் பூகம்பம் டாஸ் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் தற்போது வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்கள் தோல்வியடைந்தால், ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7ல் இருந்து எக்விக்டாகி வெளியேறிய போட்டியாளர்களிலிருந்து மூன்று போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து எவிக்டாகி வெளியேறிய பிறகு முதல்முறையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த கானா பாலா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலில் சிறப்பு பேட்டி கொடுத்தார். அந்த வகையில், மாயா எப்படி விளையாடுகிறார் அவருடைய கேம் பிலே எப்படி இருக்கிறது என கேட்டபோது, “நன்றாக விளையாடுகிறார் நன்றாக பிளே பண்ணுகிறார் என்ன ஒன்று தனி ஆளாக அவர் நிறைய விளையாட வேண்டும் தனி ஆளாக விளையாட வேண்டும் அல்லவா? இவர்கள் சொல்வது அவர்கள் சொல்வது எல்லாம் விட்டுவிட்டு.. நேரத்தை எல்லாம் வீணடிக்க கூடாது. பழைய பிரச்சினைகளுக்கு நேரத்தை வீணடிக்க கூடாது. மக்கள் நமக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அதையே பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது மாற்றி விட வேண்டும். அடுத்து அடுத்து கண்டன்டுகளுக்கு போக வேண்டும். குறிப்பிட்டு ஒருவரையே கார்னர் பண்ணிக் கொண்டிருந்தால் அது கேம் கிடையாது அல்லவா? எல்லாரையும் கார்னர் பண்ண வேண்டும் இல்லையா.. என்னிடம் சண்டை போடவில்லையே மாயா. என்னிடம் ஏன் போடவில்லை. நானும் வீட்டில் இருக்கிறேன் என்னிடம் ஏன் சண்டை போடவில்லை.  என்னை யார் என்று தெரியும் அல்லவா? நான் ஒன்னும் வெளிநாட்டில் இருந்து வந்தவன் அல்ல வெளி மாநிலத்திலிருந்தும் வந்தவன் அல்ல அவர்களுக்கு என்னை தெரியும். ஏன் என்னிடம் சண்டை போடவில்லை. நான் ஏன் வீட்டுக்குள் சண்டை போடவில்லை என கேட்கிறீர்கள் அவர்கள் ஏன் என்னிடம் சண்டை போடவில்லை போடலாம் அல்லவா... என்றார் தொடர்ந்து அவரிடம் நீங்கள் ரொம்பவும் அமைதியாக இருந்த மாதிரி தானே இருந்தது என கேட்டபோது அமைதியாக இல்லை அப்சர்வ் பண்ணி கொண்டு இருந்தேன். இப்போது உதாரணத்திற்கு நான் மாயாவிடம் போய் சண்டை போட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன், “ஓ நம்மளைப் பற்றி வெளியே மக்களிடம் வெயிட்டாக இருக்கிறது அதனால் நம்மை கலாய்த்தால் தான் அண்ணன் வெளியில் அதிகமாக கவனிக்கப்படுவார் அதனால்தான் நம்மிடம் சண்டை போடுகிறார்” இப்படி அவர் நினைப்பார்.” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட கானா பாலாவின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.