திரைப்படங்களில் நடித்தாலும், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தமிழில் டிஆர்பி கிங் நிகழ்ச்சியாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா ஆனந்த். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடினர். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக அவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் டோட்டலாக தனது உடல் எடையை குறைத்தார். தனது ஒல்லி பெல்லி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து ஒல்லி பெல்லி தோற்றத்திற்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது சல்பர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக காக்கி சட்டை போட்டு கெத்து காட்டி வருகிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யாவின் கடமை செய் படத்திலும் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட நடிகைகள் மாலத்தீவை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் துபாயில் சாகச சுற்றுலா செய்து வருகிறார். துபாய் ஹோட்டல் ஒன்றில் அவரது பெயர் போட்ட ரொட்டியை செஃப் ஒருவர் செய்து அசத்தும் வீடியோவையும் சமீபத்தில் பதிவிட்டு வைரலாக்கி இருந்தார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்யும் சாகசத்திலும் நடிகை யாஷிகா ஆனந்த் ஈடுபட்டுள்ளார். தற்போது அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த். கவர்ச்சி மட்டுமில்லை சாகசமும் சாத்தியம் என்பதை பலருக்கும் புரிய வைத்துள்ளார் யாஷிகா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand)