தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

இதனையடுத்து வெளியான குக்கு வித் கோமாளி எனும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் சீசன் 1-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு மற்றும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்த நடிகை வனிதா தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில், பிக் பாஸ் தமிழ் 3, குக்கு வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு சீசன் 9, பிக்பாஸ் ஜோடிகள் என தொடர்ந்து எனக்கு சிறந்த வாய்ப்பளித்த விஜய் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள். நான் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். சுரேஷ் சக்கரவர்த்தி மன்னித்துவிடுங்கள் நான் இதை செய்தாக வேண்டும் என அறிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார் வெளியிட்ட அறிக்கையில், முதலில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காளி அவதாரம் இட்டதற்காக எனக்கு கிடைத்த அனைத்து பாராட்டுகளுக்கும், என்னுடைய ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் என்பதை அறிவிப்பதற்கு முன்னால் நான் இங்கே எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறேன் என்று நீங்கள் அனைவரும் பாருங்கள்  என மிகவும் நெகிழ்ச்சியாக மற்றும் ஆவேசமாக தெரிவித்திருக்கிறார். 

மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவருக்கு நடந்த கொடுமைகள் மற்றும் விலகுவதற்கான மொத்த காரணங்களையும் இந்த அறிக்கையில் தெளிவாக வெளியிட்டிருக்கிறார் அந்த அறிக்கையை கீழே உள்ள லிங்கில் காணலாம்.