செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. தற்போது வரை இந்த படமும், இதில் இடம்பெற்றுள்ள பாடல்களும் காதலர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. காலத்தை தாண்டி காவியமாய் திகழ்கிறது. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, விஜயன் ஆகியோர் நடித்த இந்த படத்தை AM ரத்னம் தயாரித்தார். 

Arvind Krishna About 7G RainbowColony Movie Poster

காதல் பறவைகள் கதிர்-அனிதா, ஸ்ட்ரிக்ட்டான மிடில் கிளாஸ் அப்பா, கடைசி வரை இருக்கும் நண்பர்கள் என ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பார் செல்வா. இன்று வரை இந்த படம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் உள்ள எதார்த்தம். 

Arvind Krishna About 7G RainbowColony Movie Poster

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா அவரது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் மேக்கிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஹீரோ, ஹீரோயின் பேருந்தின் படிக்கட்டில் தொங்கும் காட்சி உருவானது குறித்து கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் தனக்கு பிடித்த ஷாட் இதுதான் என்றும், பின்னாளில் இதுவே படத்தின் போஸ்டராக மாறியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.