அருவி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன், தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து குட்டி ஸ்டோரி ஆன்தாலஜி வெப்சீரிஸ் நடித்திருந்தார். அடுத்ததாக தற்போது நடிகர் பிரித்திவிராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய மலையாள திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இயக்குனர் தாணு பாலக் இயக்கும் புதிய திரைப்படமான கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தை  பிரபல தயாரிப்பாளரான அண்டோ ஜோசப் தயாரித்துள்ள கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்திற்கு பிரகாஷ் அலெக்ஸ் இசையமைக்க பிரபல ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் நடிகை அதிதி பாலன், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, அணில் நெடுமங்காடு, சுசித்ரா பிள்ளை, ஆத்மியா ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படம் அமேசான் PRIME VIDEO  OTT தளத்தில் நேரடியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. வருகிற ஜூன் 30ஆம் தேதி வெளிவரவுள்ள கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தின் புதிய டீசர் சமீபத்தில் வெளியானது. மிகவும் த்ரில்லிங்காகவும் சுவாரசியமாகவும் இருக்கும் கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் அடுத்ததாக கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தின் இந்த புதிய ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.கோல்ட் கேஸ் (COLD CASE) படத்தின் திரில்லிங்கான ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கை காணலாம்.