தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கான சூப்பர் ஹிட் பாடல்களையும் மாஸ்ஸான பின்னணி இசையையும் கொடுத்து தமிழ் சினிமாவின் ஃபேவரட் இசையமைப்பாளராக ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத்.

அடுத்ததாக இசையமைப்பாளர் அனிருத், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துவரும் திருச்சிற்றம்பலம் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்ததாக தற்போது அனிருத் இசையில் புதிய விழிப்புணர்வு பாடல் வெளிவரவுள்ளது. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவரும் ஊசிங்கோ பாடலை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் அனிருத் இசையில் உருவாகும் இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு பாடலான ஊசிங்கோ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில் அதன் முன்னோட்டமாக அனிருத் மற்றும் அறிவு இருவரும் இணைந்து பேசும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.