தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. படத்திற்கு படம் தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் அரண்மனை-3.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆயுதபூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி திரைக்கு வரும் அரண்மனை-3 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகும் பிசாசு 2 படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிசாசு 2 படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து தனது அடுத்த திரைப்படத்தை இன்று தொடங்கியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனரான பாபி ஆண்டனி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் நடிகை ஆஷா சரத், நடிகர்கள் சந்தோஷ் பிரதாப் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரான் எத்தன் யோஹன் இசையமைக்க, அகில் அரக்கல் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் ஆண்ட்ரியா சந்தோஷ் பிரதாப் & பாபி அண்டனி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்ட பட பூஜையின் புகைப்படங்கள் இதோ…