சின்னைத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானஸா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ஆல்யா செம்பாவாக நடித்து பிரபலமானார். அவரை பலரும் தங்கள் வீட்டுப் பெண்ணாக பார்க்கிறார்கள். மேலும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் ஆல்யா. இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவழித்து வருகின்றனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.மகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்த ஆல்யா சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு சீரியலுக்கான டெஸ்ட் ஷூட் கலந்துகொண்டார்.ஆல்யா என்ன தொடரில் நடிக்கிறார்,அந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறாரா அல்லது கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாரா போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.இதற்கான விடையை விரைவில் அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. 

சமீபத்தில் செல்ல மகளுக்கு தற்போதே டான்ஸ் கற்றுக்கொடுப்பது போன்ற வீடீயோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகியது. இந்நிலையில் தற்போது ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். வெறித்தனமாக டான்ஸ் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ஒரு டான்ஸ் பர்ஃபார்மென்ஸுடன் விஜய் டிவியில் கம்-பேக் கொடுக்க போகிறேன். 

பயிற்சி தொடங்கிவிட்டது. விரைவில் டிவியில் பார்க்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த டான்ஸ் பயிற்சி, பிக்பாஸ் போட்டியின் ஓப்பனிங்காக இருக்குமோ என நெட்டிசன்ஸ் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர். 

திருமணத்திற்கு பிறகு திரைப்பட நடிகைகள் ஜோதிகா, சினேகா ஆகியோர் திரையில் கம்-பேக் தந்தது போல் ஆல்யா மானஸாவும் கம்-பேக் தருகிறார் என புகழாரம் சூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். இன்னும் சிலர் ஒரு வேலை பிக்பாஸ் நிகழ்ச்சியாக இருக்குமோ என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My come back in VIJAY TV with a dance performance Practice session is on Soon on television 😍

A post shared by alya_manasa (@alya_manasa) on