டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2,மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

பேய் பட பிரியர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய படம் காஞ்சனா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இதன் அடுத்த பாகங்கள் உருவாகின.இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ்.தனது சூப்பர்ஹிட் படமான காஞ்சனாவை ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார்.இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.kiara அத்வானி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.லக்ஷ்மி Bomb என இந்த படம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது என்று சில மாதங்களாக செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பை அக்ஷய் குமார் இன்று லைவ்வில் வெளியிட்டார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துடன் இணைந்து மேலும் 6 ஹிந்தி படங்கள் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது அவை 

1 லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள Laxmmi Bomb

2 சுஷாந்த் சிங்கின் DilBechara 

3 அஜய் தேவ்கன் நடித்த Bhuj

4 ஆலியா பட் நடித்த Sadak2

5 அபிஷேக் பச்சன் நடித்துள்ள TheBigBull

6 vidyut jamwal நடித்துள்ள KhudaHaafiz

7 Lootcase

இதில் மறைந்த சுஷாந்த் சிங்கின் DilBechara திரைப்படம் முதலில் ஜூலை 24ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜூலை முதல் அக்டோபர் வரை மற்ற படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.