ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபெற்று உலகளவில் பிரபலமானவர் ஜூலி. அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்றார். பிக் பாஸ் வீட்டில் ஜூலி எப்பொழுதோ சொன்ன பொய்யை இன்னும் நினைவில் வைத்துக் கொண்டு அவரை இன்றுவரை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். 

வெளியுலகிற்கு நடிகையாக தெரிந்தாலும், சிறந்த செவிலியரும் கூட. சமூக வலைதளங்களில் ஜூலி என்ன பதிவு செய்தாலும் அவரை கேலி செய்து, கிண்டலடித்து பதிவுகளை செய்து வருகின்றனர். இதனால் ஜூலி ட்விட்டரை பயன்படுத்துவதை குறைத்துவிட்டார். நேற்று ஜூலி தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜூலியின் புகைப்படத்தை பூஜை அறையில் சாமி படங்களுடன் வைத்திருக்கிறார். மேலும் அவரின் செல்ஃபோன் கேஸில் ஜூலியின் புகைப்படங்களை வைத்து ஜூலி ரசிகன் டா என்று எழுதி வைத்திருக்கிறார். அந்த ரசிகர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஜூலிக்கு இப்படி ஒரு ரசிகரா, எங்களுக்கே அவரை நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தொலைக்காட்சியில் அடிக்கடி வராவிட்டாலும், ஜூலிக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது.