தமிழ் சினிமாவில் 90 களின் காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரோஜா. கடந்த 1992 இயக்குனர் செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘செம்பருத்தி’ இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதன்பின் தொடர்ந்து பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, பிரபு தேவா, விஜயகாந்த் என முன்னணி நடிகருடன் நடித்து ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற நடிகை ரோஜா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். இவர் தன்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திரைத்துறை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ரோஜா தொகுப்பாளராக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நடிகை ரோஜா ஆந்திரா அரசியலில் அதிரடியாக களம் இறங்கினார். சிறந்த களப்பணியினால் கடந்த 2014ம் ஆண்டு நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். தற்போது இவர் ஆந்திராவின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
திரைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு மிக்க மதிக்கத்தக்கவராக வலம் வரும் அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா நேற்று இரவு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இது குறித்து ரோஜா அவர்களின் கால் வீக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரோஜா அவர்களின் உடல்நிலை விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் பிராத்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.