கோலாகல கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த விழா.. குவியும் வாழ்த்துகள் – வைரலாகும் அழகிய புகைப்படங்கள் உள்ளே..

வருண் தேஜ் லாவண்யா திருப்பாதி நிச்சய விழா வைரல் புகைப்படங்கள் உள்ளே -Varun tej lavanya tripathi engagement viral pictures | Galatta

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களில் மிக முக்கியமான நடிகராய் வலம் வருபவர் வருண் தேஜ். பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நாகேந்திர ராவ் அவர்களின் மகன் வருண் தேஜ் திரையுலகில் தனித்துவமான கதைகளில் நடித்து அவருக்கே உரித்தான ஸ்டைலில் பல மாஸ் ஹிட்டுகளை கொடுத்து தெலுங்கு திரையுலகில் கவனம் பெற்ற நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘கண்டிவதாரி அர்ஜுனா’ என்ற படம் உருவாகி வருகிறது. பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

actress roja selvamani admitted to hospital for leg swelling check details here

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதியை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் வருண் தேஜ். லாவண்யா திரிப்பாதி தமிழில் பிரம்மன், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் தேஜ் – லாவண்யா திருப்பாதியும் கடந்த 2018 ல்  அந்தரிக்ஷம் 9000KMPH என்ற படத்தில் நடித்ததில் இருந்தே காதலித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இவர்களது காதல் கதை குறித்து அவ்வப்போது  பல தகவல்கள் வெளியாகியிருந்தது. இருவரது திருமணம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இருந்தும் இருவரின் தரப்பிலிருந்து காதல் விஷயத்தில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்காமல்  இருந்தனர்.

actress roja selvamani admitted to hospital for leg swelling check details here

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் வருண் தேஜ் – லாவண்யா திரிப்பாதி இருவருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. இந்த விழா வருண் தேஜ் உறவினரும் பிரபல நடிகர்க்களுமான சிரஞ்சீவி, பவன் கல்யாண் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் விழாவில் ராம் சரண், அல்லு அர்ஜுன், சாய் தரம் தேஜ், பஞ்ச வைஷ்ணவ் தேஜ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

actress roja selvamani admitted to hospital for leg swelling check details here

நிச்சய விழாவையடுத்து இருவரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக காதலை உறுதிப்படுத்தினர். இதையடுத்து வருண் தேஜ் லாவண்யா திருப்பாதி இருவரது நிச்சய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது. மேலும் திரைபிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திருமண நாள் குறித்து எந்தவொரு தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆண்டு இறுதியில் இருவரது திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

View this post on Instagram

A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela)

மாஸ் காட்சிகளுக்கிடையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு.. -  டக்கர் படக்குழு வெளியிட்ட சிறப்பு காட்சி.. – வைரலாகும் வீடியோ உ
சினிமா

மாஸ் காட்சிகளுக்கிடையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு.. - டக்கர் படக்குழு வெளியிட்ட சிறப்பு காட்சி.. – வைரலாகும் வீடியோ உ

தொடர் சாதனைகளை படைத்து வரும் டோவினோ தாமஸின் 2018 திரைப்படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் உள்ளே..
சினிமா

தொடர் சாதனைகளை படைத்து வரும் டோவினோ தாமஸின் 2018 திரைப்படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் உள்ளே..

“வாழ்வின் கடிமான சோதனையில்..” சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் பிரபல நடிகை கஜோல் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“வாழ்வின் கடிமான சோதனையில்..” சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் பிரபல நடிகை கஜோல் – வைரலாகும் பதிவு இதோ..