இசை விரும்பிகளின் உலகமாக திகழ்ந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி பாலசுப்ரமணியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கடந்த சனிக்கிழமை தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

எஸ்.பி.பி-ன் மறைவை இன்னமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எஸ்பிபி மறைந்துவிட்டார் என்பதையும் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. விடியல் முதல் இரவு வரை ஏதாவது ஒரு தருணத்தில் எஸ்பிபியின் குரல் பலரது வாழ்க்கையில் இரண்டரக் கலந்துள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியம் உடனான நினைவுகளை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு ஒன்றறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தப்படி சிரித்து பேசும் போது எடுத்த போட்டோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த விரலில் விளைந்த மெட்டுக்கள், அந்தக் குரலில் குழைந்த பாட்டுக்கள்...இந்தப் பயணம் முடிவதில்லை: இசையின்றி நாட்கள் விடிவதில்லை...என்றும் விவேக் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு போட்டோவை பகிர்ந்ததற்கு நன்றி சார் என நடிகர் விவேக்குக்கு நன்றி கூறியுள்ளனர்.

திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். 

மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். தான்யா ஹோப் நாயகியாக நடித்திருந்தார்.

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விவேக். உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் விவேக்.